அரசு பொது தேர்வுகளில் மாணவர்களுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்று வழங்க, பள்ளிக் கல்வித்துறையால் புதிய சாபட்வேர் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. மாணவர்களின் போட்டோவுடன் மதிப்பெண் சான்று வெளியிட, இந்த ஆண்டு முதல் பள்ளிக்கல்வி தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேர்வு எழுதும் மாணவர்களை டிஜிட்டல் முறைப்படி போட்டோ எடுக்கவும், தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தபட்டுள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலக எல்லைக்குள் உள்ள ஒரு பள்ளியை தேர்வு செய்து, இங்கு கல்வி மாவட்ட அளவில், தேர்வு எழுதும் மாணவர்களது போட்டோவுடன் பட்டியல் சேகரித்து, தயார் நிலையில் இருக்கும்படி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் புது சாப்ட்வேர் குறித்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் இரண்டு கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு நவம்பர் 25லும், வட மாவட்டங்களுக்கு நவம்பர் 26ல் பயிற்சி வழங்கப்படவுள்ளது. டிஜிட்டல் போட்டோவுக்கான செலவை, அந்தந்த தேர்வர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்வுகள் இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.