Friday, January 28, 2011

Janaaza News


அஸ்ஸலாமு அழைக்கும்

பண்டாரவாடை மர்ஹூம் மணியாளி அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் விரான்செரி அப்துல்லா அவர்களின் மனைவியும் சூபி நகர் சித்திக், யூசுப் நகர் ஜாபர் அவர்களின் தாயாருமான ஹாபிபுநிஷா அவர்கள்  27-1-2011 அன்று  காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.

Thursday, January 27, 2011

இலவச கணினி பயிற்சி



சிறுபான்மை மாணவர்களுக்காக TAMCO வழங்கும் இலவச கணினி பயிற்சி. இதில் MS Office with C, C++, MS Office with Tally ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபக்ச தகுதி 10th பாஸ் அல்லது பெயில். இச்சலுகை சுமார் 10500 மாணவர்களுக்கு வழங்கப்படயிருக்கிறது. 

Wednesday, January 26, 2011

Happy Republic Day


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

Tuesday, January 25, 2011

தேசிய வாக்காளர் தினம்


நாடு முழுவதும் வாக்காளர் தினம் ஜனவரி 25 செவ்வாய்கிழமை இன்று இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25 தேதி தோற்றிவிக்கப்பட்டதால் இந்நாளை நினைவுகூரும் விதமாக "தேசிய வாக்காளர் தினமாக" ஒவ்வரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வேன்! வாக்களிக்க தயார் ஆவேன்!! என்ற முழக்கத்துடன் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடி வருகிறது. 

Sunday, January 23, 2011

போலியோ சொட்டு மருந்து முகாம்




               தமிழ் நாடு முழுவதும் ஐந்து வயதுற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று(23-01-2011) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பிப்ரவரி 27 அன்றும் இரண்டாம் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்து 399 மையங்களில் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடம்கள்,பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
                  

Saturday, January 22, 2011

புதிய வாக்காளர் பட்டியல்


அஸ்ஸலாமு அழைக்கும் 
              வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் 2011 தேர்தல் ஆணையம் வெளிட்டுள்ளது.அனைவரும் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்துக்கொள்ளவும்.வாக்காளர் பட்டியல் 2011-ல் வாக்காளர் பட்டியல், திருத்தம் பட்டியல், சேர்த்தல் பட்டியல் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வருவரும் தங்கள் வார்டு-ஐ தேர்தெடுத்து பெயரை சரி பார்த்துக்கொள்ளவும்.
  
வார்டு 1:  இதை கிளிக் செய்யவும் 

வார்டு 2:  இதை கிளிக் செய்யவும்

வார்டு 3: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 4:  இதை கிளிக் செய்யவும் 

வார்டு 5: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 5-6: இதை கிளிக் செய்யவும் 

வார்டு 6-7:  இதை கிளிக் செய்யவும்

Friday, January 21, 2011

JBS ASSOCIATION


நம் சமுதாய மக்கள் வட்டியால் தினம் தினம் அல்லல்படுவத்தையும் மேலும் அவர்கள் தற்கொலை, உடமைகள் ஜப்தி, மானக்கேடு போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை நாம் அன்றாட நாளேடுகளில் காண்கிறோம். 
           மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்த்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை.எனினும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். 
                                                                                                     அல் குர்ஆன்(30:39) 
                 ராஜகிரி, அய்யம்பேட்டை போன்ற இடங்களில் வட்டியில்லா கடன் திட்டம் இயங்கி வருவதை கருத்தில் கொண்டு நம் பண்டாரவாடை சமுதாய மக்களுக்காக மலேசியா தொழில் அதிபர் K. முஹமம்து சலீம் அவர்களின் முயற்சியால் 17-12-2010 வெள்ளிக்கிழமை அன்று JBS ASSOCIATION நிறுவப்பட்டது

Wednesday, January 12, 2011

பண்டாரவாடை இடைதேர்தல் முடிவுகள்


         ஜமாத்தார்களின் ஆதரவோடு போட்டியிட்ட வேட்பாளர் M.கமருஜமான் அவர்கள் 251 வாக்குகள் முன்னிலை பெற்று அமோக வெற்றி பெற்றார்.

Janaaza News


அஸ்ஸலாமு அழைக்கும்  
            
             நமதூர் திருமஞ்சனவீதி காட்டான் அப்துல் காதர் அவர்களது மகனும், பாஹாத் என்கின்ற ஷாகுல் ஹமீது,யாசர் அரபாத் அவகளின் தந்தையுமான பாவாஜி என்கின்ற K.A. ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் 11-01-2011 இரவு காலமாகிவிட்டார்கள். 
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.

Tuesday, January 11, 2011

தேர்தல் நிலவரம் 11-01-2011


பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான  தேர்தல் அமைதியான முறையில் சிறு சல சலப்புடன் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் M.கமருஜமான் மற்றும் T.அசோக் ஆகிய இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நமது ஊரில் சுமார் 4669 வாக்குகள் உள்ளன. இதில் பதிவானவை 2625 வாக்குகள். அதாவது 56% சதவீத வாக்குகள். மீதமுள்ள 2044 வாக்குகள் எங்கே?
        வாக்காளர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருகிறார்களா? அல்லது தேர்தலை புறக்கணித்தார்களா? இரண்டுமே இல்லை. வாக்குப்பதிவு சுமார் காலை 7.00  மணியளவில் தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆவலோடு, தனது தலைவனை தேர்ந்தெடுக்க வாக்குச்சாவடிக்கு விரைந்தனர். அங்கே அவர்களுக்கு வேறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. அவர்களிடம் அடையாள அட்டை இருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயரும் இருந்தது.அதிகாரிகள்  அவர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை காரணம் அவர்கள் பெயர் வாக்காளர் நீக்கல் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

Monday, January 10, 2011

Janaza news


பண்டாரவாடை தெற்குத்தெரு மந்தியா மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும், முஹம்மது அலி, நஜீர், கனி இவர்களின் தாயாருமாகிய சபுரம்மாள் அவர்கள் 09-01-2011  அன்று நெடுந்தெருவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜுவூன்.

Thursday, January 6, 2011

உங்கள் வேட்பாளர் M. கமருஜமான்


உங்கள் வேட்பாளர் M. கமருஜமான்    

                     
         

Wednesday, January 5, 2011

இதோ உங்கள் இணையதளம் ஆரம்பம்