பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று தமிழகமெங்கும் முஸ்லிம் இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10:30 மணியளவில் குடந்தை மீன் மார்க்கெட் முன் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையத்திற்கு முன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. தஞ்சை ரயில்நிலையம் முன் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
த.மு.மு.க. வின் சார்பில் குடந்தையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கோவை ஜாகிர் அவர்கள் தலைமையேற்று கண்டன உரை நிகழ்த்தினர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை ஜாபர் தலைமை தாங்கினார். இந்த ஆர்பாட்டங்களில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர் .