Monday, November 28, 2011

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!


வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 

வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு அரசு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி...யுள்ளது.

சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களைப் பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கு 50,000 திர்ஹம்வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, அவ்வாறு பணியாற்றும் ஊழியர்களைத் திரும்ப நாடுகடத்தவும் செய்கின்றது. எனினும், துபாய் மோகத்தால் இத்தகைய சட்டவிரோத வேலைவாய்ப்புகள் வெவ்வேறு வகைகளில் நடந்து வருவதை அந்நாட்டு அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

Saturday, November 26, 2011

தமிழகத்தில் மின் கட்டணம்: 'ஸ்லாப்' குறையுது.. கட்டணம் மட்டும் கூடுது..!


சென்னை: மின் கட்டணத்தை உயர்த்தக் கோரும் தமிழக அரசின் (மின் வாரியத்தின்) மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொண்டது.

வீடுகளுக்கு இதுவரை 7 'ஸ்லாப்புகளாக' பிரித்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதை இப்போது 4 'ஸ்லாப்புகளாக' குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 100 யூனிட் வரை ஒரே 'ஸ்லாப்பாக' கணக்கிடப்பட உள்ளது.

இனிமேல் முதல் 100 யூனிட்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.50 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோர்க்கு ஒரு யூனிட்டுக்கான கட்டணம் ரூ. 2 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Friday, November 25, 2011

சைனிக் பள்ளியில் சேர நுழைவுத்தேர்வு!


அமராவதி சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் சைனிக் பள்ளி, திருப்பூர் அமராவதியில் உள்ளது. சி.பி.எஸ்.சி. மைய உயர் கல்விக் குழுவின் பாடத்திட்டத்தினைக் கொண்ட இப்பள்ளியில் மாணவர்கள் மட்டுமே சேர முடியும். இப்பள்ளியில், இந்திய இராணுவத்தில் சேருவதற்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தரமும் தகுதியுமிக்கவர்களாக ஆக்கும் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன்.

உங்கள் Password- இதில் இருக்கிறதா அப்படியென்றால் உங்கள் Account களவாட படலாம் !


இவ்வருடத்தின் மோசமான கடவுச்சொற்களைப் பிரபல நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. 
 
கடவுச்சொற்களை முகாமைத்துவம் செய்யும் அப்ளிகேஷனை உருவாக்கும் நிறுவனமொன்றே இவற்றை வெளியிட்டுள்ளது. பரந்த ஆய்வொன்றின் அடிப்படையிலேயே குறித்த நிறுவனம் இவ் அறிக்கையொன்றினைத் தயாரித்துள்ளது. 

அதன்படி அதிகமாக ஹெக்கிங் செய்யப்பட்ட கடவுச் சொற்கள் இதோ.
1. password
2. 123456
3. 12345678
4. qwerty
5. abc123
6. monkey
7. 1234567
8. letmein

உதவித்தொகையுடன் ACS படிக்கலாம்!


நல்ல ஊதியத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நிச்சயம் வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பதற்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கும் என்கிறார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா தென்மண்டலத் தலைவர் பி.ரவி.

கம்பெனி செக்ரட்டரி படிப்பு குறித்து ‘புதிய தலைமுறை கல்வி’க்கு அவர் அளித்த பேட்டி:

கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்வி நிலையம், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும். மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் உள்ளன.

Thursday, November 24, 2011

ஈரானுக்கெதிரான புதிய தடைகள்


அணுத்திட்ட சர்ச்சைகள் காரணமாக ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை மேற்குலக நாடுகள் அமுல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனாடா ஆகிய நாடுகள் இந்த தடைகளை விதித்துள்ளன.

ஃபிரான்ஸில் மிகப்பெரிய பள்ளிவாசல்


பெண்ணியத்திற்கு கண்ணியம் அளிக்கும் ஹிஜாபை தடை செய்ய முயன்றுகொண்டிருக்கும் பிரான்ஸின்Marseille - மர்ஸை (ஃபிரென்ச் உச்சரிப்பு இதுதான்) என்ற நகரத்தின் செயின்ட் லூயிஸ் என்ற பகுதியில் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்நகரத்தில் மட்டும் சுமார் 2,50,000 முஸ்லிம்களும் ஃபிரான்ஸ் முழுமைக்கும் சுமார் 60 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது... குறிப்பிடத்தக்கது. வருகிற 2012 ஆம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 22 மில்லியன் யூரோமதிப்பிலான இப்பள்ளியில் குர் ஆன் வகுப்புகள், நூலகம், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளடங்கியதாக இருக்கும்.

Wednesday, November 23, 2011

Job Openings in Kuwait


Openings at Al Hamra Kuwait Co.,
Electrical Foreman Project Engineer - Structural Senior Accountant Project Engineer-Electrical Project Engineer - Instruments Project Engineer - Mechanical

Apply Online
http://www.hamrakt.com/apply_online.php

**************************
*********************************************************

Subject: Openings for Commissioning Engineer / QA/QC Manager for major EPC Projects in Oil & Gas Sector Kuwait

1. Commissioning Engineer/Manager
• More than 10 years of experience In Security System Installation
• Good Knowledge and field experience of Pre-Commissioning, Commissioning and Turnover Procedures

பாபர் மஸ்ஜித் நிஜங்களும்-போராட்டங்களும்



கி.பி.1526 - முதல் பாணிபட் போர் டெல்-க்கு அருகே (இன்றைய ஹரியானா மாநிலத்தில்) பாபருக்கும் அப்போது டெல்-யை ஆண்ட இப்ராஹிம் லோடிக்கும் இடையே நடந்தது. லோடி கொல்லப்பட்டு பாபர் வெற்றி பெறுகிறார். இந்தியாவின் வரலாறு மாறுகிறது. பாபர் முகலாயப் பேரரசின் தலைவராக அறியணை ஏறுகிறார்.

நியாய விலை கடை இருக்கின்ற பொருள்களின் Status அறிய


உங்கள் நியாய விலை கடை (ரேஷன் கடை)  இருக்கின்ற பொருள்களின் அளவு   தெரிந்துகொள்ள ஆசையா? ஆம் என்றால்  

உங்க மொபைல்லில் இருந்து       [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] 

என்று  டைப் செய்து  9789006492, 9789005450 இந்த இரண்டு எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு SMS அனுப்பினால் போதும். நியாய விலை கடையினுள் இருக்கின்ற பொருள்களின் தகவல் உங்கள் மொபைல்லில்  உடனே கிடைக்கும்.

Tuesday, November 22, 2011

உலகின் மிகப்பெரிய குர்ஆன்!!!


உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் ரஷ்யாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இப்புனித நூலானது ரஷ்யாவின் கலாச்சார மற்றும் மரபுரிமைகள் நிதியத்தின் வேண்டுகோளிக்கு இணங்க இத்தாலியில் உருவாக்கப்பட்டதாகும்.
இரத்தினக்கற்களாலும்,தங்கத்தாலும் அழகுபடுத்தப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய குர்ஆன் பிரதி ரஷ்யாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்புனித அல்குர்ஆனானது 800கிலோகிராம் எடை கொண்டதுடன் 632பக்கங்களைக் கொண்டுள்ளது.

PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி!


PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது. புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.

முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Monday, November 21, 2011

எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிவாய்ப்பு


இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ( பி.எஸ்.எப்.,) ஆகும். இந்த படையில் டெக்னிகல் பிரிவுகளான ஒர்க்ஸ் மற்றும் எலக்ட்ரிகலில் துணை கமாண்டண்ட்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒர்க்ஸ் பிரிவில் 19 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: பி.எஸ்.எப்.,பின் இந்த இரண்டு பிரிவுகளுக்குமே குறைந்த பட்ச வயது 21ஆகவும், அதிக பட்ச வயது 26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒர்க்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது


இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அன்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். மாநிலம் முழுவதும் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை www.trb.tn.nic.in வெளியிட்டது.  மாநில பதிவு மூப்பு தகுதி அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் மொத்தம் 9,200 பேர் கொண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Sunday, November 20, 2011

முக்கிய அறிவிப்பு.........!!!



அஸ்ஸலாமு அழைக்கும்,

facebook-ல் கடந்த சில தினங்களாக இறைவனின் புனிதமிக்க ஆலயமான காபதுல்லா மீது ஆபாசம் நிறைந்த ஒரு பெண் அமர்ந்திருப்பது போலும்,  மற்றொரு புகைப்படத்தில் காபதுல்லா மீது பன்றி அமர்ந்திருப்பது போலும்,  நாய் கழிவது போலும் புகைப் படம் வெளியானது.

அதை கண்டவுடன் பல சகோதரர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.  நமக்கு விளங்குவது அந்த அசிங்கம் கொண்ட போட்டோவை UPLOAD செய்தவன், நாம் எவ்வளவு தூரம் கண்டிக்கிறோம் என்பது அவனுக்கு முக்கியமில்லை, 

எந்த அளவிற்கு பலரால் கண்டிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பபடுகிறது என்ற நோக்கத்திலேயே வெளியிடுகிறான்.

எனவே சகோதரர்கள் யாவரும் இது மாதிரியான போட்டோவிற்கு SHARE அல்லது COMMENTS எதுவும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது. 

ஏனெனில் நீங்கள் அந்த போட்டோவிற்கு COMMENTS கொடுக்கும் போது உங்களுடைய அனைத்து நண்பர்களுக்கும் சென்றுவிடுகிறது.

அந்த மிருகத்தின் நோக்கமும் அதுவே தான்...!!

நீங்கள் அந்த புகைப்படத்தை காணும் போது உங்களுடைய உணர்சிகளை கட்டுபடுத்தி

அந்த படத்திற்கு அருகில் உள்ள அம்புக்குறியை தேர்வு செய்து அதிலுள்ள Report Story or spam என்பதை click செய்து விடவும்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

இளைஞர்களே ! நீங்களும் பத்திரிகை துறையில் அங்கம் வகிக்க வேண்டுமா !! உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு !!!



சமுதாய சொந்தங்களே...!

அஸ்ஸலாமு அலைக்கும்....

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட சமுதாயம் தன்னுடைய வரலாறு தெரியாமல் வாழ்ந்து வருகிறது.

ஆங்கிலேயர்களை விரட்டி அடித்த சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இன்று அவை மறைக்கப்படுகிறது.

அதுமட்டும் அல்ல உலகிற்கு நன்மை செய்யும் முஸ்லிம்கள் பற்றியும் மறைக்கப்படுகிறது.

இதற்கு அடிப்படை காரணம் முஸ்லிம்களாகிய நாம் கூர்மை கொண்ட பத்திரிக்கை துறையில் இல்லாத ஒன்று தான்.




பத்திரிக்கை துறையில் நாம் இருந்தால், உண்மை செய்திகளை கொண்டு, நமது சமுதாய எழுச்சிக்கு வித்திடலாம். சுதந்திர தினத்தில் மருதநாயகம், திப்பு சுல்தான் போன்றவர்கள் வரலாற்றை கூறலாம். ஆவணப்படம் எடுத்து, இன்று முஸ்லிம்கள், உலக அரங்கில் படக்கூடிய கஷ்டங்களை சொல்லலாம். செய்யாத தவறுக்காக பல ஆண்டுகள் சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றியும், அவர்கள் குடும்பம் படும் இன்னல்கள் பற்றியும் எடுத்து சொல்லக்கூடிய கூர்மை ஆயுதம், இந்த காட்சி ஊடகமான பத்திரிக்கை துறை.

Saturday, November 19, 2011

பேருந்து மற்றும் பால் கட்டணம் உயர்வால் மக்கள் பெரும் அவதி


தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பேருந்து  கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தி அரசு அறிவித்து இருக்கிறது.  போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய முதலமைச்சர் நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார்.


வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு அன்று காலை முதலே அமலுக்கு வந்துள்ளது.  சென்னையில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.  நகர பேருந்து கட்டணம் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

JBS Association - இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


அஸ்ஸலாமு அழைக்கும்,

நமதூரில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுருக்கும் JBS Association வட்டி இல்லா கடன் வழங்கும் நிறுவனம் தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலத்தெருவில் புதிதாக அமைந்துள்ள கட்டிடத்தில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். இனி வரும் காலங்களில் அனைத்து பரிமாற்றங்களும் மேலத்தெருவில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில் நடைபெறும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆதார் அடையாள அட்டை விண்ணப்பங்கள் 21ம் தேதி தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் தொடக்கம்


இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள் பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும் மருத்துவத்துக்கும் மொபைல் போன் இணைப்பு பெறவும் இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

Friday, November 18, 2011

ஹிஜ்ரி இஸ்லாமிய காலேண்டர் - சிறப்பு பார்வை


உலகில் தற்போது 40 காலண்டர்கள் உபயோகத்தில் உள்ளன. அதை பற்றிய சிறிய தொகுப்பு. பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள்  பெரும்பாலும் செப்டெம்பர் மாதத்தை புதுவருடமாக கருதினர். பாபிலோனியர்கள் வசந்த காலத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடி வந்தனர். ரோமானியர்கள் நீண்ட காலமாக புதுவருடமாக கருதினர். இவர் தான் கலண்டரை வடிவமைப்புச் செய்தவர்கள். அப்போது வருடத்திற்குப் பத்து மாதங்களே வரையறை செய்தனர்.

மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவை அமைந்திருந்தன. பின் கி.மு. 713-இல் தான் ஜனவரியும் பிப்ரவரியும் லீப் வருடமும் சேர்க்கப்பட்டன. அப்போதும் மார்ச்சிலேயே துவங்கிவந்த வருடம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் தான் ஜனவரி 1 முதல் துவங்கும் படி மாற்றப்பட்டது.

Thursday, November 17, 2011

உமர் முக்தார் ( Lion of Desert ) (1862 – செப்டம்பர் 16, 1931)


மர் முக்தார்…! பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இக்கட்டுரையில் காண்போம் .


             உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

Tuesday, November 15, 2011

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்.


உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள்.