Wednesday, March 2, 2011

பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்குகிறது


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 ந் தேதி இன்று தொடங்கி 28 ந் தேதியுடன் முடிவடைகிறது. பிளஸ் 2 தேர்வு இன்று தமிழ் முதல் தாளுடன் தொடங்குகிறது. பிளஸ் 2 தேர்வை 7 லட்சத்து 80 ஆயிரத்து 631 பேர் எழுதுகிறார்கள். அவர்களில் 5477 பள்ளிகளை சேர்ந்த 7 லட்சத்து 23 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். நமதூரில் உள்ள கிரசென்ட் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு 24 மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

                         தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் கண்காணிப்பு உறுப்பினர்கள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள். மாணவர்கள் தேர்வில் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். துண்டு சீட்டு வைத்திருத்தல், அடுத்த மாணவரை பார்த்து எழுத முயற்சி செய்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடத்தல், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுதல் ஆகியவை குற்றமாகும். 
                        இதில் அதிகபட்ச தண்டனையாக சிறைத்தண்டணை கிடைக்கும். அவர்கள் தேர்வு எழுத முடியாது. கோர்ட்டு வழக்கு முடிந்தபின்னர் தான் அதுபற்றி முடிவு செய்யப்படும். தேர்வை நல்ல முறையில் நடத்திட மாணவர்களும் ஒத்துழைக்கவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28 ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ந்தேதி முடிகிறது என்பது குறிபிடத்தக்கது. 

பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:
மார்ச் 2 ந் தேதி  தமிழ் முதல் தாள்

3 ந் தேதி  தமிழ் இரண்டாம் தாள்

7 ந் தேதி  ஆங்கிலம் முதல் தாள்

8 ந் தேதி  ஆங்கிலம் இரண்டாம் தாள்

11 ந் தேதி  இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

14 ந் தேதி  வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து

17 ந் தேதி  கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

18 ந் தேதி  வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

21 ந் தேதி  உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்

23 ந் தேதி  தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்

25 ந் தேதி  அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

மேலும் விபரங்களுக்கு  http://www.tn.gov.in/