Tuesday, January 3, 2012

ஐ-பேட் -2 (ipad-2 ) வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சீன இளைஞர்


சீன இளைஞர் ஒருவர் ஆப்பிள் ஐ-பேட் -2 ( ipad-2 ) மீது காதல் கொண்டு அதை வாங்குவதற்காக தனது ஒரு  சிறுநீரகத்தை £2,000 விற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூபாய் 137500. 17-வயது நிரம்பிய அந்த இளைஞரின் பெயர்  “Zheng”.ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர் ipad-2 வாங்க பணம் இல்லாததால் இணையதளத்தில் கண்ட விளம்பரத்தின் முகவரியை அணுகியுள்ளார். சிறுநீரகத்தை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு பணத்தை பெற்றுள்ளார்.

சீனாவில் உடல் உறுப்பை விற்பது வாடிக்கையாகிவிட்டது. அதுவும் கள்ளசந்தையில் உறுப்பை விற்றுக்கும் இளைஞர்கள் ஏராளம். சீன அரசாங்கத்தால் பல முயற்சி எடுத்தும் பயனில்லை. வலியை சமாளித்துக்கொண்ட இளைஞர் தனது அம்மாவிடம் வசமாக மாட்டிக்கொண்டார். பின்னர் காவல்துறையில் புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.