Wednesday, January 4, 2012

பெண்களின் உள்ளாடைக் கடைகளில் இனி ஆண்கள் தேவையில்லை! - சவுதி அரசாங்கம்


சவூதி அரேபியாவில் உள்ள பெண்களுக்கான உள்ளாடைக் கடைகளில் இனி பெண்கள் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளன. பெண்களை பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் நடத்தும் நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. பெண்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பல சட்டைகள் அவ்வபோது இயற்றபடுவதுண்டு. இந்நிலையில் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடைகளில் இனி பெண்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டு இதுபோன்ற உத்தரவு பிறக்கப்பட்டும் அது அமலுக்கு வரவில்லை. ஆனால் இந்த முறை பிறப்பித்துள்ள உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளாடைக் கடைகளில் பணிபுரிய சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.