புத்தாண்டு அன்று கர்நாடகாவில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய ராம் சேனா அமைப்பை சேர்ந்த பேர்களை போலிசார் கைதுசெய்துள்ளனர். போலீஸ் கண்காணிப்பாளர் ராஜப்பா கூறுகையில் ராம் சேனா மாணவ அமைப்பின் சேர்ந்த மாணவர்கள் சித்தராமைய மாத்த(), அருண் வாக்மோர் (), பரசு ராம வாக்மோர்,சுனில் மதிவலப்பா அகசர்(), ஈஸ்வர நவி () மற்றும் மல்லன கௌடா விஜய குமார் பாட்டில் ஆகியவர் ஈடுபட்டுள்ளனர் இவ்வாறு கூறினார். இதில் மத்தா என்பவர் மாணவ அமைப்பின் தலைவர்.
பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதால் சிங்கி மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. வாகனகளையும், கடைகளையும் அடித்து உடைத்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல அமைப்புகள் பந்த-க்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ராம் சேனா அமைப்பும் அழைப்பு விடுதுருந்தது.
ஏன் இந்த கொலைவெறி?...எதற்கு அந்நிய நாட்டு கொடியை ஏற்றவேண்டும் குறிப்பாக பாகிஸ்தான் கொடி..இவர்களின் நோக்கம் என்ன.?..சுதந்திர இந்தியாவில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக விளங்கும் இந்த அமைப்பை மத்திய அரசு ஏன் இன்னும் தடை செய்ய வில்லை என்பது பலரது கருத்து.