தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தி அரசு அறிவித்து இருக்கிறது. போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய முதலமைச்சர் நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார்.
வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு அன்று காலை முதலே அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. நகர பேருந்து கட்டணம் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், அதிக அளவு கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நமது ஊரிலிருந்து பாபநாசம் செல்வதற்கு அரசு நிர்னைக்கப்பட்ட தொகை ரூபாய் 3.50. சிலகாலமாக மறைமுகமாக ரூபாய் 4 வசூலித்து வந்தனர். தற்போது பாபநாசம் செல்வதற்கு 6 ரூபாயும், தஞ்சாவூர் செல்வதற்கு16 ரூபாயும், கும்பகோணம் செல்வதற்கு 9 ரூபாயும் வசூலிக்கபடுகிறது.
பஸ் பாஸ் :
பஸ் பாஸ்களின் கட்டணங்களும் 200 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன. ஏற்கனவே பாஸ் வாங்கியவர்கள் இன்று மாலைக்குள் கூடுதல் கட்டணத்தை செலுத்தி சீல் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதை நாளை முதல் பயன்படுத்த முடியாது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒரேயொரு முறை பாஸ் எடுத்து நாள் முழுவதும் (இரவு 10 மணி வரை) எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக் கொள்வதற்கான டிக்கெட்டின் விலை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாராந்திர பஸ் பாஸ் விலை ரூ.100ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.600ல் இருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மட்டும் போய் வருவதற்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.140ல் இருந்து ரூ.240 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்ந்துள்ளது.
கிட்டத்தட்ட பஸ் பாஸ்களின் விலை ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு பயணிகளின் பார்வைக்காக அனைத்து பஸ் டெப்போக்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
மாத பஸ் பாஸ் ஏற்கெனவே வாங்கியவர்கள் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் கூடுதல் தொகை செலுத்தி சீல் வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அந்த பாஸை பயன்படுத்தி மாநகர பஸ்களில் பயணிக்க முடியும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.