Thursday, November 24, 2011

ஃபிரான்ஸில் மிகப்பெரிய பள்ளிவாசல்


பெண்ணியத்திற்கு கண்ணியம் அளிக்கும் ஹிஜாபை தடை செய்ய முயன்றுகொண்டிருக்கும் பிரான்ஸின்Marseille - மர்ஸை (ஃபிரென்ச் உச்சரிப்பு இதுதான்) என்ற நகரத்தின் செயின்ட் லூயிஸ் என்ற பகுதியில் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்நகரத்தில் மட்டும் சுமார் 2,50,000 முஸ்லிம்களும் ஃபிரான்ஸ் முழுமைக்கும் சுமார் 60 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது... குறிப்பிடத்தக்கது. வருகிற 2012 ஆம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 22 மில்லியன் யூரோமதிப்பிலான இப்பள்ளியில் குர் ஆன் வகுப்புகள், நூலகம், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளடங்கியதாக இருக்கும்.

ஒரே நேரத்தில் சுமார் 7000 பேர் தொழுகை நடத்த முடியும். இப்பள்ளியில் அமையயுள்ள மினாராவானது 25 மீட்டர் (82 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். ஃபிரான்ஸ் அரசு இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக எத்தனை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.