அமராவதி சைனிக் பள்ளியில் 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து நடத்தும் சைனிக் பள்ளி, திருப்பூர் அமராவதியில் உள்ளது. சி.பி.எஸ்.சி. மைய உயர் கல்விக் குழுவின் பாடத்திட்டத்தினைக் கொண்ட இப்பள்ளியில் மாணவர்கள் மட்டுமே சேர முடியும். இப்பள்ளியில், இந்திய இராணுவத்தில் சேருவதற்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தரமும் தகுதியுமிக்கவர்களாக ஆக்கும் பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன்.
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2012-2013ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9ஆம் வகுப்பில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு வருகிற 8.01.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது. 1.07.2012 அன்று 10 வயது முடிந்து 11 வயது முடியாமலும் (2.07.2001 இருந்து 1.07.2002 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6 வது வகுப்பில் சேரமுடியும். பெற்றோர்களின் மாத வருமானம் அடிப்படையில் ரூ.50ஆயிரம் வரை மாநில, மத்திய அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும்.
9 வது வகுப்பில் சேர 1.07.2012 அன்று 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் (2.07.1998 லிருந்து 1.07.1999 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கவேண்டும். அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8 வது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே 9 ம் வகுப்பில் சேரத் தகுதியுண்டு.
விளக்கக் குறிப்பேடும் விண்ணப்பப்படிவமும் பெற விரும்பினால் பொதுப்பிரிவு மற்றும் படைத்துறைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் ரூ.550 க்கும், ஆதிதிராவிடர் இனத்தவர் மற்றும் பழங்குடி வகுப்பினர்கள் ரூ.400 க்கும் (இதில் பதிவுக்கட்டணமும் பழைய வினாத்தாளும் அடங்கும்) அமராவதிநகர் பாரத ஸ்டேட் வங்கியில் (கிளை எண் 2191) பெறத்தக்க வகையில் முதல்வர் சைனிக்பள்ளி, அமராவதி நகர் என்ற பெயரில் வரைவோலை (டி.டி.) எடுத்து அனுப்ப வேண்டும். அத்துடன் சுயவிலாசமிட்ட 25x20 செமீ உறையுடன் அனுப்பவேண்டும்.
மேலும் எந்த வகுப்பிற்கு (6 அல்லது 9) அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் எந்தப்பிவைச் சேர்ந்தவர் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், படைத்துறையினர், பொதுப்பிரிவினர்) என்பதனையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
சைனிக் பள்ளியின் இணையதளத்தின் http://www.sainikschoolamaravathinagar.edu.in/ என்ற முகவரியில் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவங்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இதனால் விண்ணப்பப் படிவத் தொகையை நுழைவுத்தேர்வு படிவத்தோடு சேர்த்துக் கட்டுவதற்கு இயலும். 6 வது வகுப்பில் சேர விரும்புவோர் நுழைவுத் தேர்வு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) எழுத விரும்பும் மொழியைக் குறிப்பிடவேண்டும்.
விண்ணப்பமும் மற்றும் விளக்கக் குறிப்பேடும் 03.12.2011 வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை,
முதல்வர்,
சைனிக்பள்ளி,
அமராவதிநகர்-642102,
உடுமலை வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
சைனிக்பள்ளி,
அமராவதிநகர்-642102,
உடுமலை வட்டம்,
திருப்பூர் மாவட்டம்.
என்ற முகவரிக்கு 10.12.2011 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
"மேலும் விபரங்களுக்கு 04252 256246, 256296 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். இப்பள்ளிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. தேர்வுதகுதி, மருத்துவச் சோதனை அடிப்படையிலும் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்" என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உ.சகாயம் தெரிவித்துள்ளார்.
-inneram.com