இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ( பி.எஸ்.எப்.,) ஆகும். இந்த படையில் டெக்னிகல் பிரிவுகளான ஒர்க்ஸ் மற்றும் எலக்ட்ரிகலில் துணை கமாண்டண்ட்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒர்க்ஸ் பிரிவில் 19 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: பி.எஸ்.எப்.,பின் இந்த இரண்டு பிரிவுகளுக்குமே குறைந்த பட்ச வயது 21ஆகவும், அதிக பட்ச வயது 26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒர்க்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இது தவிர சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படுகிறது.
உயரம் ஆண்களுக்குக் குறைந்த பட்சம் 165 செ.மி.,யும், பெண்களுக்கு 157 செ.மி.,யும் மற்றும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.
இதர தகவல்கள்: பரிந்துரை செய்யப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்துடன் வயது, கல்வித் தகுதி ஆகியவற்றின் சான்றுகளின் நகல்கள், ரூ.100/-க்கான டி.டி., ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். டி.டி.,யை விண்ணப்பிக்கும் மையத்திற்கேற்ற பெயரிலும் மற்றும் மாற்றத்தக்க வகையிலும் எடுக்க வேண்டும். முழு தகவலுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.12.2011