உங்கள் நியாய விலை கடை (ரேஷன் கடை) இருக்கின்ற பொருள்களின் அளவு தெரிந்துகொள்ள ஆசையா? ஆம் என்றால்
உங்க மொபைல்லில் இருந்து [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்]
என்று டைப் செய்து 9789006492, 9789005450 இந்த இரண்டு எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு SMS அனுப்பினால் போதும். நியாய விலை கடையினுள் இருக்கின்ற பொருள்களின் தகவல் உங்கள் மொபைல்லில் உடனே கிடைக்கும்.
உங்க மொபைல்லில் இருந்து [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்]
மாவட்டகுறியீடு என்பது குடும்ப அடையாள அட்டையில் மேலே குறிபிட்டுள்ள முதல் இரண்டு எண்கள். கடை என்பது அட்டையின் முதல் பக்கத்தில் கீழே இருக்கின்ற பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள எண்கள்.
உதாரணமாக" PDS 18 FP081" என டைப் செய்து 9789005450 SMS அனுப்பவும்.
இங்கே 18 என்பது தஞ்சைமாவட்ட எண்
FP081 கடை எண்
மேலும் தகவலுக்கு இந்த வலைபக்கத்தை பார்க்கவும்
இனி நியாய விலை கடைகளில் பொருள்கள் stock இல்லை என்று கூறினால் என்ன செய்ய போகிறீர்கள்?
