உலகில் தற்போது 40 காலண்டர்கள் உபயோகத்தில் உள்ளன. அதை பற்றிய சிறிய தொகுப்பு. பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள் பெரும்பாலும் செப்டெம்பர் மாதத்தை புதுவருடமாக கருதினர். பாபிலோனியர்கள் வசந்த காலத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடி வந்தனர். ரோமானியர்கள் நீண்ட காலமாக புதுவருடமாக கருதினர். இவர் தான் கலண்டரை வடிவமைப்புச் செய்தவர்கள். அப்போது வருடத்திற்குப் பத்து மாதங்களே வரையறை செய்தனர்.
மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவை அமைந்திருந்தன. பின் கி.மு. 713-இல் தான் ஜனவரியும் பிப்ரவரியும் லீப் வருடமும் சேர்க்கப்பட்டன. அப்போதும் மார்ச்சிலேயே துவங்கிவந்த வருடம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் தான் ஜனவரி 1 முதல் துவங்கும் படி மாற்றப்பட்டது.
இது உரோமானியர்களின் கடவுளான ஜோன்ஸ் நினைவாக ஆண்டின் முதல் மாதத்திற்கு ஜனவரி என்று பெயர் சூட்டினர். அதற்குப் பின்னரே ஜூலியஸ் சீஸர் கொண்டு வந்த ஜூலியன் கலண்டர் தான் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்தன.
அங்கும் கூட பல நாடுகள் கிறிஸ்மஸ்ஸிலிருந்தும் ஈஸ்டர் தினத்திலிருந்தும் புத்தாண்டைத் துவக்கும் வழக்கமிருந்தது. ஐரோப்பியர்களும் கி.பி,1582 ஆம் ஆண்டுகளுக்கு முன்புவரை மார்ச் மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடினார்கள். சீனா மற்றும் வியட்நாம், நாடுகள் தங்கள் புத்தாண்டை ஜனவரி 21ஆம் தேதியில் கொண்டாடி வருகின்றனர். பிப்ரவரியில் திபெத்தினதும் மார்ச்சில் ஈரான் புத்தாண்டும் மலர்கின்றது. ஏப்ரல் மாததில் தமிழ, தெலுங்கு, பஞ்சாபி, கேரளா, பெங்காலி, மற்றும் சிங்கள புத்தாண்டுகள் மலர்கின்றன. அதேபோல் நேபாளம் தாய்லாந்து முதலியனவும் ஏப்ரல் மாதத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடுகின்றன.
அக்டோபர்- நவம்பரில் தீபாவளி தினத்தில் குஜராத்தி ஆண்டு மலர்கின்றன.
இது தவிர ஹிஜிரி எனப்படும் இஸ்லாமிய ஆண்டு மொகரம் எனப்படும் அரபி மாதத்தில் துவங்கும் ஹிஜிரி ஆண்டு கிறிஸ்தவ கலண்டரை விட குறைவான நாட்களைக் கொண்டது. இது 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும் ஆண்டின் மொத்த நாட்கள் 354 ஆக உள்ளது.
காரணம் இது பிறையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது. எனவே இஸ்லாமிய ஆண்டு கொஞ்சம் வேகமாகவே நடைபோடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.
"நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்'' என்று கைஸ் பின் மக்ரமா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூற்கள்: திர்மிதீ 3552, அஹ்மத் 17218)
அபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள். என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)
இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு, 3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.
உமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து "வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள்.அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப் நூல்: ஹாகிம் (4287)
எந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். "ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் போர் தடை செய்யப்பட்ட மாதம் மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம் முஹர்ரம்'' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)
இந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.நபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான்.(அல்குர்ஆன் 9:108)"இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது' என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)
தற்போது உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் ஆங்கிலக்கலண்டரினுடைய உண்மையான பெயர் க்ரகேரியன் கலண்டர் என்பதாகும்.
கி.பி 16ஆம் நூற்றாண்டில் கத்தோலியர்களின் போப்பாக இருந்த 13ஆம் போப் க்ரகேரி எனபவரின் தலமையில் கி.பி.1582 இல் வடிவமைக்கப்பட்டதே இந்தக்கலண்டராகும். இதுவே இன்று பொதுக்கலண்டராக உள்ளது.
அவ்வளவு காலமும் கிறிஸ்துவின் பிறப்புடன் ஆரம்பமான வருடம் போப் க்ரகேரியன் என்பவரால் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி யேசு பிறந்த டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினம் என்றும். அவ்வாறு யேசுபிறந்து எட்டாவது நாள் அவர் தனது பெற்றோர்களால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அவர் ஞானஸ்தானம் பெற்ற நாளையே வருடத்தின் முதன்நாளாக ஆரம்பிக்க வேண்டும்.
ஜனவரி 1 என்று அமுல் செய்தார். போப் ஆரம்பித்து வைத்த கலண்டர் என்பதால் ஐரோப்பாவில் அரசர்கள் வாதம் பண்ணாமல் ஏனெனில் ஐரோப்பியர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக இருந்தனர்.
ஆகவே அவர்களும் போப் வடிவமைத்த கலண்டரையே உபயோகித்தனர். 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆதிக்கம் ஆசியநாடுகளில் பரவியபோது இக் க்ரகேரியன் கலண்டரும் திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்று அதுவே உலகப் பொதுக்கலண்டராக்கப்பட்டது.
