Wednesday, January 12, 2011

பண்டாரவாடை இடைதேர்தல் முடிவுகள்


         ஜமாத்தார்களின் ஆதரவோடு போட்டியிட்ட வேட்பாளர் M.கமருஜமான் அவர்கள் 251 வாக்குகள் முன்னிலை பெற்று அமோக வெற்றி பெற்றார்.

பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான  இடைதேர்தல் 10-01-2011 அன்று நடைப்பெற்றது. இத்தேர்தலில் M.கமருஜமான் மற்றும் T.அசோக் ஆகிய இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
          12-01-2011 இன்று காலை 8.00 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே வேட்பாளர் M.கமருஜமான் அவர்கள் முன்னிலையில் இருந்தார்.ஒவ்வரு வார்டுகளிலும் மிகுதியான வாக்குகளால் முன்னிலை பெற்றார். இறுதியாக 10.30 மணியளவில் அனைத்து வார்டுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடியுகள் அறிவிக்கப்பட்ட.பல்பு சின்னத்தில் போட்டியிட்ட  வேட்பாளர் M.கமருஜமான் அவர்கள் 1421 வாக்குகள் பெற்றார்.பூட்டு  சின்னத்தில் போட்டியிட்ட  வேட்பாளர் T.அசோக் அவர்கள் 1171 வாக்குகள் பெற்றார். ஜமாத்தார்களின் ஆதரவோடு போட்டியிட்ட வேட்பாளர் M.கமருஜமான் அவர்கள் 251 வாக்குகள் முன்னிலை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
     இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிகிழமை அன்று பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்கிறார். அவர் பணிகளை சிறப்பாக செய்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
 
மொத்த வாக்குகள்   : 4669 

பதிவான வாக்குகள் : 2625 
  
M.கமருஜமான் அவர்களின் வாக்குகள்: 1421

T.அசோக்  அவர்களின் வாக்குகள்     : 1171

செல்லாதவை                                 :    38

                       M.கமருஜமான்                 T.அசோக்

வார்டு-1                              288                                  13
வார்டு-2                              335                                   15
வார்டு-3                              241                                   19
வார்டு-4                              358                                  317
வார்டு-5                                66                                  391
வார்டு-6                              133                                  406