Tuesday, January 25, 2011

தேசிய வாக்காளர் தினம்


நாடு முழுவதும் வாக்காளர் தினம் ஜனவரி 25 செவ்வாய்கிழமை இன்று இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாடி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25 தேதி தோற்றிவிக்கப்பட்டதால் இந்நாளை நினைவுகூரும் விதமாக "தேசிய வாக்காளர் தினமாக" ஒவ்வரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வேன்! வாக்களிக்க தயார் ஆவேன்!! என்ற முழக்கத்துடன் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடி வருகிறது.   
                                  இந்த ஆண்டு வாக்களிக்க தகுதிபெற்ற 11.5 லட்சம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.நமது ரில் சூபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. புதிதாக வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.