Sunday, January 23, 2011

போலியோ சொட்டு மருந்து முகாம்




               தமிழ் நாடு முழுவதும் ஐந்து வயதுற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று(23-01-2011) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பிப்ரவரி 27 அன்றும் இரண்டாம் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்து 399 மையங்களில் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடம்கள்,பஸ், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
                  
                   சொட்டு மருந்து கொடுத்தவுடன் குழந்தையின்   இடது கை  விரலில் மை வைக்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் வழங்கப்படும். நமது ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை  போலியோ சொட்டு மருந்து  கொடுக்கப்படும். அனைவரும் ஐந்து வயதுற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.