Friday, January 21, 2011

JBS ASSOCIATION


நம் சமுதாய மக்கள் வட்டியால் தினம் தினம் அல்லல்படுவத்தையும் மேலும் அவர்கள் தற்கொலை, உடமைகள் ஜப்தி, மானக்கேடு போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை நாம் அன்றாட நாளேடுகளில் காண்கிறோம். 
           மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்த்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை.எனினும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர். 
                                                                                                     அல் குர்ஆன்(30:39) 
                 ராஜகிரி, அய்யம்பேட்டை போன்ற இடங்களில் வட்டியில்லா கடன் திட்டம் இயங்கி வருவதை கருத்தில் கொண்டு நம் பண்டாரவாடை சமுதாய மக்களுக்காக மலேசியா தொழில் அதிபர் K. முஹமம்து சலீம் அவர்களின் முயற்சியால் 17-12-2010 வெள்ளிக்கிழமை அன்று JBS ASSOCIATION நிறுவப்பட்டது
            இந்நிறுவனத்தின் நோக்கம் ஏழை எளிய மக்களை வட்டி முதலைகளிடம் மீட்டு, தன்னம்பிக்கையுடனும்,சுயமரியாதையுடன் மார்க்க வழியில் வாழ வகை செய்கிறது. இதில் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் அவசர தேவைக்காக தங்கள் உடமைகளை(தங்கம்) கொடுத்து வட்டியில்லாமல் கடன் பெறலாம். இத்தொகையை வட்டியில்லாமல் ஆறு மாத கால அவகாசத்திற்குள் திரும்ப செலுத்தி தங்கள் உடமைகளை(தங்கம்) மீட்டுக்கொள்ளலாம்.

கடன் பெறுபவரிடம் இருக்க வேண்டியவை
  • கடன் பெறுபவர் குடும்ப அட்டை நகல். 
  • ஜாமிந்தாரர் ஒருவர் கையெழுத்து மற்றும் குடும்ப அட்டை நகல்.
  • தொகைக்கேற்ப தங்கம். 
  • K.A. அப்துல் பாசித்(இமாம் பெரிய பள்ளிவாசல்) அவர்களின் சிபாரிசு.

RD ACCOUNT (மாத சேமிப்பு கணக்கு)
                 இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் தங்கள் பணத்தை வட்டி இல்லாமல் சேமிக்கலாம்.மாதம் 100 முதல் உங்களால் முடிந்த தொகையை 2 வருட காலத்திற்கு  சேமிக்கலாம். நம் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள், தொழில் முனைவோர் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி வாங்குபவர்கள் மீதும், வட்டி கொடுப்பவர்கள் மீதும், அவ்விருவருக்கும் சாட்சியாக இருப்பவர்கள் மீதும், வட்டிகனக்கு எழுதுபவர்கள் மீதும் சாபமிட்டார்கள்.
                                                         அறிவிப்பாளர்: இப்னுமாஸ் ஊத் (ரலி). 
                                                                           புஹாரி-முஸ்லிம்

 
JBS ASSOCIATION யின் மற்ற சேவைகள் :
  • இலவச திருமண உதவி,
  • இலவச மருத்துவ உதவி,
  • இலவச கல்வி உதவி,
  • மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 
  •  
    JBS ASSOCIATION  நிர்வாகிகள் 
     
    தலைவர் :                        K. முஹமம்து சலீம்

    துணை தலைவர்:             P. அஸ்ரப் அலி

    செயலாளர்:                      A. முஹமம்து இக்பால்

    துணை செயலாளர்:          Y.J. முஹமம்து யாகுப் 

    பொருளாளர் :                  M. முஹமம்து சலீம்

    ஆலோசகர் :                     P.A. ஷேக் அலாவுதீன்
                                             K.A. அப்துல் பாசித்(இமாம் பெரிய பள்ளிவாசல்)
                                             A.A. ஹாஜா ஷரீப்
                                             Y.H. முஹமம்து அலி
                                             M.P. முஹமம்து இப்ராகிம்
                                             M. கமருஜமான்

     JBS ASSOCIATION மூலம் இதுவரை சுமார் 20-கும் மேற்பட்ட நம் சமுதாய மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு    

    CONTACT:    A.MOHAMED IQBAL
                       JBS ASSOCIATION
                       NO-2,RAILWAY STREET,
                       PANDARAVADAI - 614204
                       PHONE : 9944876732