Thursday, February 24, 2011

பிளஸ் 2 பொதுத்தேர்வு 2011


                                வரும் மார்ச் 2-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.  மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். 
            தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன. நேரடியாகத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும். விடைத்தாள், வினாத்தாள் ஆகியவையும் அச்சிடப்பட்டுவிட்டன. தேர்வு மையங்களைத் தேர்வு செய்வது, வினாத்தாள் தயாரிப்பது, ஹால் டிக்கெட் வழங்குவது என 3 மாதங்களாக தேர்வுத்துறை செய்துவந்த அனைத்துப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

                       தம் பிள்ளைகள் எதிர்காலத்தில் நன்றாக வர வேண்டும் என்பது ஒவ்வரு பெற்றோர்களின் விருப்பம்.  தேர்வுகள் நெருங்கிய இவ்வேளையில் பிள்ளைகளை ஊக்குவித்து அதிகமதிப்பெண் எடுக்கவைப்பது பெற்றோர்களின் கடமை. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்