Monday, February 14, 2011

பாபநாசம் தொகுதி ஒரு பார்வை


தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியை 1977 முதல் 2006 வரை காங்கிரசே தக்க வைத்து கொண்டுருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டு நடந்து தேர்தலில் அ.தி.மு.க.-வை முதல் முதலாக வெற்றி பெற வைத்து காங்கிரஸ்க்கு அதிர்ச்சி கொடுத்தார்கள் பாபநாசம் தொகுதி இஸ்லாமிய மக்கள்.
     காங்கிரஸ் சார்பாக நின்ற ராம்குமார் கூட்டணி கட்சிகளை அனுசரித்து போகாததுதான் தோல்விக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் 1977 முதல் 2006 வரை காங்கிரஸ் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட நிறுத்தாததின் விளைவுதான் ராம்குமார் தோர்க்கடிக்கப்படார் என்று மறைமுகமாகவும் பேசப்பட்டது. 

1977 முதல் 2006 வரை வெற்றி பெற்றவர்களின் விவரம்:

1977-------------------ஆர்.வி.சவுந்தர்ராஜன் (காங்)
1980-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1984-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1989-------------------ஜி.கருப்பையா மூப்பனார் (காங்)
1991-------------------எஸ்.ராஜா ராமன் (காங்)
1996------------------- கருப்பண்ண உடையார் (காங்)
2001------------------- ராம்குமார் (காங்)
2006------------------- ராம்குமார் (காங்) தோல்வி


          1996 ஆம் ஆண்டு நடந்து தேர்தலில் பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட அப்போதைய பாபநாசம் பேரூராட்சி பொருளாளரும் பண்டாரவாடை கிளை தலைவருமான எம்.எம். சர்புதீன் அவர்கள்  விருப்பம் தெருவித்த போது இவருக்கு மறுத்து விட்டு கருப்பண்ண உடையாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

          இந்த முறை காங்கிரஸ் பாபநாசம் தொகுதியில் இஸ்லாமியரை நிறுத்த போவதாக செய்திகள் வருகின்றன.

      பெயரளவில் உள்ள இஸ்லாமியரை நிறுத்தி மீண்டும் மண்ணை கவ்வப்போகிறாதா? இல்லை செயலளவில் உள்ள இஸ்லாமியரை நிறுத்தி விட்ட தொகுதியை பிடிக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி :எம்.குலாம் தஸ்தகீர்
                                                                                                                                    ஷார்ஜா