தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கு 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இக்கல்வி தொகை 3 நிலைகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்படிப்புகள் வரை அடங்கும்.
1 - 10 வகுப்பு வரை :
தகுதிகள் :
- கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது.
- ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது.
பயன்கள் :
- கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்.
- சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்.
- விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு.
- கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்.
- ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி.
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
- சாதி சான்றிதல் நகல் (xerox).
- பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் ).
- வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்).
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
- புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10.
- புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26.
கூடுதல் தகவல்கள் :
- புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.
- ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்ப படிவங்கள் :
11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)
தகுதிகள் :
- கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது.
பயன்கள் :
- கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
- 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்.
- விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு.
- கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்.
- ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி.
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
- சாதி சான்றிதல்.
- பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் ).
- வருமான சான்றிதல்(அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்).
- உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது.
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
- புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
- புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
- புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.
- ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Fresh -------------- Claim
Renewal ----------- Claim
தொழிற்படிப்புகள் ( Engineering, MBBS )
தகுதிகள் :
தகுதிகள் :
- கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது.
பயன்கள் :
- கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது ).
- IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design management (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்.
- 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்.
- விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை வழங்கப்படும்.
- கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்.
- ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி.
சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
- சாதி சான்றிதல்.
- பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் ).
- வருமான சான்றிதல்(அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்).
- உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது.
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
- புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
- புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26
கூடுதல் தகவல்கள் :
- புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
- ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Fresh & Renewal Renewal Claim
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் :http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm
நன்றி :Ziaudeen Ahamed
Kuwait
Kuwait