நாட்டின் 15வது தேசிய கணக்கெடுப்பு சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் வரை நிறைவடைந்தது. இதில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புகள் அடங்கும். தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 9 பிப்ரவரி 2011 அதாவது நாளை தொடங்கி வரும் 28 பிப்ரவரி 2011 அன்று நிறைவடைகிறது. அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை செய்யவுள்ளார்கள்.
இக்கணக்கெடுப்பின்போது அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிப்பதனால் நம் சமுதாய மக்களுக்கு அரசாங்கம் சலுகைகள் அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தங்கள் ஒத்துழைப்பை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிகாரிகள் கேட்கும் சில கேள்விகள் இதோ:
- நபரின் பெயர்,
- குடும்பத்தலைவருக்கு உறவு முறை,
- இனம்,
- பிறந்த தேதி ,
- தற்போது திருமண நிலை ,
- திருமணத்தின் பொது வயது,
- மதம்,
- ஷெட்டியூல்டு வகுப்பு மற்றும் ஷெட்டியூல்டு பழங்குடி,
- மாற்றுதிறன்(ஊனம்),
- தாய்மொழி,
- பிறமொழி,
- எழுத்தறிவின் நிலை,
- கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை ,
- அதிகபட்ச கல்வி நிலை, மேலும் பல கேள்விகள்..............................................
மேலும் விபரங்களுக்கு http://censusindia.gov.in/
